‘ வாழவே இஷ்டமில்லை என சுஷாந்த் அடிக்கடி சொல்லுவார்’- மருத்துவர்கள் தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலிவுட் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர். கடந்த ஜூன் மாதம் அவர் தற்கொலை செய்து கொண்டார். 


Advertisement

image

பாலிவுட்டில் நிலவும் நெப்போட்டிசமே அவரது தற்கொலைக்கு காரணம் என சொல்லப்பட்டது. பின்னர் அவரது காதலி நடிகை ரியா சக்கரவர்த்தி தான், சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் என குற்றம்சாட்டி போலீசில் புகாரும் அளித்திருந்தார் சுஷாந்தின் தந்தை. 


Advertisement

தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வரும் சூழலில் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்கள் முன்னரே மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டார் என போலீசாரிடம் தெரிவித்துள்ளனர் அவருக்கு சிகிச்சை அளித்த மனோதத்துவ மருத்துவர்கள். 

கடந்த 2019 நவம்பர் முதல் 2020 ஜூன் வரையில் சுஷாந்த் இரு வேறு மனோதத்துவ மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.

‘மனோதத்துவ மருத்துவத்தில் மனக் கவலையினால் ஆட்பட்டவர்களை 1 முதல் 10 வரை என்ற அளவுகோலில் பிரிப்பது வழக்கம். சுஷாந்த் 9 அல்லது பத்து என்ற நிலையில் இருந்தார். டீன் ஏஜிலேயே நிகழ்ந்த அவரது அம்மாவின் இழப்பும் சுஷாந்த் கொண்டிருந்த கவலைகளில் ஒன்றாகும்’ என மருத்துவர் ஒருவர் போலீசில் தெரிவித்துள்ளார்.  


Advertisement

image

‘சுஷாந்தின் தற்கொலை முடிவுக்கு சில நாட்களுக்கு முன்னர் ஜூன் 8 அன்று எனக்கு வீடியோ கால் செய்திருந்தார். அவரிடம் பேசியதில் நான் பரிந்துரைத்த மருந்துகளை அவர் எடுத்துக் கொள்ளவில்லை என்பது எனக்கு தெரிந்தது. ஏன்? என அவரிடம் கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தார்’ என மற்றொரு மருத்துவர் தெரிவித்துள்ளார். 

மன அழுத்தம் மற்றும் கவலையினால் பாதிக்கப்பட்டிருந்த சுஷாந்த் அடிக்கடி தனக்கு வாழவே இஷ்டமில்லை என மருத்துவர்களிடம் சொல்லியதாகவும் போலீசில் இரு மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். 

image

மேலும் ஜூன் 8 அன்று நடிகை ரியா சக்கரவர்த்தி இரண்டு மருத்துவர்களில் ஒருவரை தொடர்பு கொண்டு சுஷாந்தின் நிலையை சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் பிக்ஸ் செய்தார் எனவும், ஆனால் அதை ரத்து செய்து விட்டு அவரது நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அவரை கவனித்துக் கொள்ள அவரது குடும்பத்தினர் வருவதாகவும் ரியா சொன்னதாக போலீசில் தெரிவித்துள்ளார் மருத்துவர் ஒருவர். 

மும்பை போலீசாருக்கு மருத்துவர்கள் கொடுத்த விவரங்கள் அனைத்தும் தற்போது சி.பி.ஐ பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

loading...

Advertisement

Advertisement

Advertisement