பவன் கல்யாணுக்குப் பிடித்த ஊதா கலர் ரிப்பன்... அன்பில் நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிவகார்த்திகேயன் ரொம்பவும் மனம் குளிர்ந்துவிட்டார். தனக்கு மிகவும் பிடித்த பாடலாக "ஊதா கலர் ரிப்பன்..." பற்றி சமூகவலைதளத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் குறிப்பிட்டதுதான் அதற்குக் காரணம். பவன் பிறந்தநாளான செப்டம்பர் 2-ம் தேதியன்று வாழ்த்துத் தெரிவித்திருந்தார் சிவகார்த்திகேயன்.


Advertisement

வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த பவன் கல்யாண், "உங்கள் வெற்றிக்கு வாழ்த்துகள். உங்களுடைய ஊதா கலர் ரிப்பன் பாடலை மிகவும் விரும்புகிறேன். அந்தப் பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

image


Advertisement

அதில் வியப்படைந்த சிவகார்த்திகேயன், "உங்கள் பதிலைக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு ஊதா கலர் ரிப்பன் பாடல் பிடிக்கும் என்பதில் உற்சாகமடைகிறேன். நன்றிக்கும் அன்புக்கும் மிகப்பெரிய நன்றி" என்றும் நெகிழ்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வெளியான அந்தப் பாடல் இசைமயமாக கேட்பவர்களைக் கிறங்கவைத்தது. அந்தப் பாடலுக்கு மயங்காதவர்களே இருக்கமுடியாது என்ற அளவுக்கு அது பிரபலமாகியிருந்தது. இன்றுவரையில் ஊதா கலர் ரிப்பன் குழந்தைகளுக்கும் பிடித்த பாடல்தான்.

loading...

Advertisement

Advertisement

Advertisement