[X] Close

கிச்சன் சீலிங்கை உடைத்து வீட்டிற்குள்ளே நுழைந்த மலைப்பாம்புகள்- ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள பிரிஸ்பேனில் ஓய்வுபெற்ற ஊழியரான டேவிட் டைட் என்பவரின் வீட்டு சமையலறையில் வீட்டு சீலிங்கை உடைத்து இரண்டு பாம்புகள் உள்ளே நுழைந்து தட்டின்மேல் படுத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.


Advertisement

2.8மீ மற்றும் 2.5மீ நீளமுள்ள அந்த இரண்டு பாம்புகளும் ஆண் பாம்புகள் என்றும், அவை இரண்டும் ஒரு பெண் பாம்புக்காக போட்டிப் போட்டு சண்டையிட்டதாக பாம்புகளை பிடிக்கவந்த ஸ்டீபன் ப்ரவுன் கூறியுள்ளார். அந்த பெண் பாம்பை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனவும், அந்த பெண் பாம்பு வீட்டிற்குள்ளேயே இருக்கலாம் எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த இரண்டு ஆண் பாம்புகளையும் வனப் பகுதியில் விட்டுவிட்டனர்.

image


Advertisement

இதற்கு முன்பே அவர்கள் வீட்டுப்பகுதியில் பாம்புகள் வந்திருப்பதாகவும், ஆனால் இவ்வளவு பெரிய பாம்புகள் வீட்டிற்குள் வந்தது இதுதான் முதன்முறை என்றும் டைட் கூறுகிறார்.

இந்த காலநிலை மாற்றத்தில் ஆஸ்திரேலியாவில் பல பாம்புகள், வசிக்கும் இடத்திற்குள் வர வாய்ப்புகள் இருப்பதாகவும், பாம்பாட்டிகள் பணம் சம்பாதிக்க நல்ல தருணமாகவும் இது இருப்பதாக அவர் கூறுகிறார். இங்குள்ள பாம்புகள் மிகவும் விஷம் வாய்ந்தவையாக இருப்பதால் பாம்பாட்டிகளின் உதவியின்றி அருகில் செல்வது ஆபத்தானது என்றும் அவர் கூறுகிறார்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement