தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.


Advertisement

image
இதில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.


Advertisement

image
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில்15, திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரத்தில் 11, நிலக்கோட்டையில் 10, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் மற்றும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 8, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, ஈரோடு மாவட்டம் தாளவாடி, நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் ஆகிய இடங்களில் தலா 7, விழுப்புரம் 6, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், திருப்பூர் மாவட்டம் மூலனூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் திருச்சி விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 5செ.மி மழையும் பதிவாகியுள்ளது.

image
மீனவர்களுக்கான எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வுமையம், செப்டம்பர் 2ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில. சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் கேரளா, லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்டம்பர் 02 முதல் செப்டம்பர் 06 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப் படுகிறார்கள்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement