[X] Close

'பெண்ணின் சிகிச்சைக்கான செலவுக்கு உதவிய ரசிகர்களுக்கு நன்றி’-சித்தார்த் சுக்லா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர், மாடல், தொலைக்காட்சி நெறியாளர் என பன்முகத் திறன் கொண்டவர் சித்தார்த் சுக்லா. 


Advertisement

image

அண்மையில் ஆசீட் வீச்சினால் பாதிக்கப்பட்ட சரஸ்வதி என்ற பெண்னின் மருத்துவ சிகிச்சைக்கு ரசிகர்களால் முடிந்த நிதியுதவியை அளிக்கலாம் என இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் சித்தார்த். 


Advertisement

‘சரஸ்வதிக்கு காது, மூக்கு பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்ய சிரமப்படுகிறார். தூங்கும்போது அவரது கணவர் இந்த கொடூர செயலை செய்துள்ளார். அவருக்கு உதவி செய்யுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன்’ என அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது பதிவை படித்த அவரது ரசிகர்கள் சரஸ்வதிக்கு தொடர்ந்து நிதி  உதவி அளித்து  வருகின்றனர்.

இதுவரை சுமார் பத்து லட்ச ரூபாயை சரஸ்வதியின் சிகிச்சைக்காக வழங்கியுள்ளனர் சித்தார்த்தின் ரசிகர்கள்.


Advertisement

"நல்ல மனம் கொண்ட ரசிகர்களாகிய உங்களது பங்களிப்பை பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.  உங்களது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. ‘ஒருவரிடம் எந்தவித கைமாறும் எதிர்பார்க்காமல் நீங்கள் ஒருவருக்கு செய்யும் உதவியே உங்களுக்கு அந்த நாளை சிறப்பானதாக அமைத்து கொடுக்கும்’ என சொல்வார்கள். அது போலவே உள்ளது செயல் உள்ளது. கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்” என ட்விட்டரில் தனது நன்றியை தெரிவித்துள்ளார் சித்தார்த். 

கடந்த வாரம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தன் ரசிகரின் தந்தைக்கு மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தார் நடிகர் சித்தார்த் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement