[X] Close

போலீஸ்போல நடித்து சென்னை முட்டை வியாபாரியிடம் 2.25 இலட்சம் நூதன திருட்டு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

போலீஸ் போல் நடித்து சென்னையில் முட்டை வியாபாரியிடம் 2.25 லட்ச ரூபாய் பணத்தை திருடிய கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement

image

சென்னை ஐஸ்அவுஸ் ஜாகிர்உசேன் முதல் தெருவைச் சேர்ந்தவர் முகமது வாசிம் (32). கடந்த 2 ஆண்டுகளாக முட்டை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் சென்னை மந்தைவெளி ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள ஐஓபி சிடிஎம் மிஷினில் ரூபாய் 10,000 செலுத்திவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.


Advertisement

அப்போது சிருங்கேரி மடம் சாலையில் உள்ள கிரீன் ட்ரென்ட்ஸ் என்கிற முடிவெட்டும் கடையின் வாசலில், போலீசாரின் காக்கி உடையில் நின்ற இருந்த இருவர் தன்னை மடக்கி எங்கிருந்து வருகிறாய் எவ்வளவு பணம் வைத்து உள்ளாய் என கேட்டதாக முகமது வாசிம் தெரிவித்துள்ளார். அதற்கு  ரூபாய் 2.25 லட்சம் வைத்திருப்பதாகக் முகமது வாசிம் கூறியுள்ளார். உடனே காக்கி உடையில் இருந்த இருவர் அந்த பணத்திற்கு கணக்கு காட்டவேண்டும் என்று கூறி 500 ரூபாய் நோட்டுகளாக இருந்த மொத்த பணத்தையும் வாங்கியுள்ளனர். அதன்பிறகு சிவப்பு நிற இன்னோவா  கார் ஒன்று வந்துள்ளது. அதில் ஒருவர் மட்டும் இருந்துள்ளார். மூவரும் முகமது வாசிமை விசாரித்துவிட்டு பணத்திற்கு கணக்கு காட்டிவிட்டு மந்தைவெளி காவல் நிலையத்தில் பெற்றுக் கொள்ளுமாறு கூறி விட்டு சென்று விட்டதாக தெரிகிறது.

வீட்டிற்கு சென்று குடும்பத்தினரிடம் நடந்ததை முகமது வாசிம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போதுதான் காக்கி உடையில் இருந்து போலீஸ் போல் நடித்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்தது. போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement