“விஜய் ரசிகர்கள் சின்னப்பிள்ளைகள் போல் சுவரொட்டிகள் ஒட்டுகின்றனர்” -அமைச்சர் செல்லூர் ராஜூ

minister-sellur-raju-speech-about-vijay-fans

விஜய் ரசிகர் சின்னப்பிள்ளைகள் போல் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


Advertisement

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் அறிவிப்பார். ஊரடங்கு குறித்த நல்ல செய்தியை அறிவிப்பார். பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து வரும் கூட்ட தொடரில் வலியுறுத்துவோம். ஹெச்.ராஜா எதாவது பேசிகொண்டே இருப்பார். பாஜக டெல்லிக்கு ராஜா தமிழகத்தில் வளராத கட்சி. மோடி போன்ற பிரதமர் யாரும் இல்லை. மனிதநேயமிக்க பிரதமர் மோடி மட்டும் தான். திராவிட இயக்கங்கள் மீதுதான் தமிழகத்தில் சவாரி செய்ய முடியும்.

விஜய் சொன்னதில் தவறேதும் இல்லை: செல்லூர் ராஜூ


Advertisement

இலங்கை தமிழர்கள் மற்றும் நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. தன்னுடைய பெயர் பத்திரிக்கைகளில் ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் அரசை குறை கூறுகிறார். எதிர்க்கட்சி பாராட்ட வேண்டும் என நினைப்பதில்லை. ஸ்டாலினிடம் பாராட்டு என்பது குதிரைக்கொம்பு” எனத் தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா, எம்.ஜிஆர் போல விஜய்-சங்கீதா போஸ்டர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “விஜய் ரசிகர்கள் சின்னப்பிள்ளைகள் போல் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர். விஜய் திரைத்திறையில் நல்ல வளர்ந்து வர கூடியவர். தமிழர். நல்ல நடிகர். அவ்வளவுதான்” எனத் தெரிவித்தார்.

விவேகானந்தரின் விஜயமே! வருக.. நல்லாட்சி தருக!' - மதுரையில் விஜய்  ரசிகர்களின் போஸ்டர்.! | vijay fans stick poster in madurai link with  vivekandhar | Puthiyathalaimurai - Tamil News ...


Advertisement

முன்னதாக கடந்த வாரம் நடிகர் விஜய் திருமண நாள் அன்று எம்ஜிஆர், ஜெயலலிதா போல விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை சித்தரித்து மதுரையில் ரசிகர் ஒருவர் ஒட்டிய போஸ்டர் வைரலானது. தற்போது மதுரையில் விவேகாந்தரின் விஜயமே! வருக, நல்லாட்சி தருக என்று நடிகர் விஜயின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement