இணைந்தார் பிரகாஷ்ராஜ்.. தொடங்கியது KGF2 படப்பிடிப்பு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.


Advertisement

கர்நாடக நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வெளியான திரைப்படம் கேஜிஎஃப். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

image


Advertisement

இதனைத்தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் கதாநாயகன் யாஷுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இது தொடர்பான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றன.

image

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பெங்களூருவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ் பங்குபெற்ற படப்பிடிப்பு தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. #KGFChapter2 என்ற ஹேஸ்டேக்கும் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement