மணல் கொள்ளையில் சம்பாதித்து சினிமா: நடிகர் கைது!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக நடிகர் சிவமணியைக் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


Advertisement

கடலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறியிருந்தார். அதன்படி பண்ருட்டி கெடிலம் ஆற்றில் மணல் திருட்டில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் குவிந்தன. விசாரித்து வந்த போலீசார், சிவமணியை கைது செய்துள்ளனர். இவர் ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். மணல் கொள்ளையில் சம்பாதித்த பணத்தை வைத்து, ’திட்டமிட்டபடி’ என்ற திரைப்படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்து வந்தாராம். இதில் மேகா ரத்னாகரன் ஹீரோயின் நடித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement