மதுரை: பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட 20 அடி பள்ளத்தால் பரபரப்பு...

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட 20அடி பள்ளத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


Advertisement

image
மதுரை மேல அனுப்பானடி பிரதான சாலையில், 20 அடிக்கு திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். அப்பகுதியில் கடந்த சில வாரங்களாக குடி தண்ணீர் செல்லும் குழாய்களை சீரமைப்பு செய்யும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் செல்லும் ராட்சத கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாகவும், அதிலிருந்து கசிந்த கழிவுநீர் சாலையில் மண் அரிப்பை ஏற்படுத்தியதால் திடீரென பள்ளம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.


Advertisement

image
பத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளத்தை பெரிதாக்கி, அதனை சரி செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே ஒருவருடத்திற்கு முன்பு அதே பகுதியில் 15 அடி பள்ளம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

loading...
Related Tags : மதுரை Madurai

Advertisement

Advertisement

Advertisement