'வானத்தைப் போல' பரந்த மனது.. . விஜயகாந்துக்கு தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

'வானத்தைப் போல', 'புலன் விசாரணை' திரைப்படங்களை குறிப்பிட்டு விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார் தமிழிசை. 


Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பியுள்ள பிறந்த நாள் வாழ்த்துச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: 

image


Advertisement

''வானத்தைப் போல" பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், "மரியாதை"யையும் பெற்று "புலன் விசாரணை" செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் "சகாப்தமாக" "கேப்டனாக" "மரியாதை"யுடன் "நெறஞ்ச மனசு"டன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்'' என்று வாழ்த்துக்களை பரிமாறி உள்ளார்.

மேலும் விஜயகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியதாக தமிழிசையின் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement