கொரோனா வார்டில் மது அருந்திய குற்றவாளி! விசாரணைக்கு உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வார்டில் கைவிலங்குடன் மது அருந்திய குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் சாந்து குப்தா என்பவர் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் உள்ளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானதை அடுத்து, தன்பாத்தில் உள்ள கோவிட் -19 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சாந்து குப்தா கொரோனா வார்டுக்குள் கைவிலங்குடன் மது ஊற்றி குடிப்பது போன்றும், விதவிதமான உணவுகள் அவருக்கு முன் வைக்கப்பட்டிருப்பது மாதிரியான ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.


Advertisement

image

ஒரு குற்றவாளிக்கு கொரோனா வார்டில் மது, உயர்தர உணவுகள் ஆகியவற்றை சப்ளை செய்தது யார்? கொரோனா வார்டில் உரிய பாதுகாப்பு இல்லையா என எதிர்க்கட்சிகள், நெட்டிசன்கள் கேள்விகள் எழுப்பினர்.  

இந்த விவகாரம் ட்விட்டரில் முதல்வர் சோரனின் கவனத்திற்கு கொண்டு வரப்படவே, அவர் மாவட்ட நிர்வாகத்திடம் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் சாந்து குப்தா மது அருந்தும் புகைப்படம் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து சாந்து குப்தா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ள காவல்துறை, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement
loading...
Related Tags : Jharkhand COVID-19 ward

Advertisement

Advertisement

Advertisement