சந்தேகத்தின் பேரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர் கைது: 15 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் சந்தேகத்தின் பெயரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.


Advertisement

அபு யூசவ் என்பவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் டெல்லியில் உள்ள துல கோன் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம்  இருந்த குக்கரில் 15 கிலோ வெடிப்பொருட்கள் மற்றும் துப்பாக்கி இருந்தன. அதனை போலீஸார் கைப்பற்றினர்.

இது குறித்து டெல்லி சிறப்பு காவல் அதிகாரி பிரோமோத் சிங் குஷ்வாகா கூறும்போது “ நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து அதி நவீன வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றார்.


Advertisement

image

கைது செய்யப்பட்ட அபு போலீஸாரிடம் அவரது சொந்த ஊர் உத்தரப்பிரதேசத்திலுள்ள பால்ரம்பூர் என்றும் உத்தரப்பிரதேச எண்ணைப் பயன்படுத்தி வாகனத்தில் வந்ததாகவும், அப்போது போலீஸார் கைது செய்து விட்டதாகவும் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

சந்தேகத்தின் பேரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என கைது செய்யப்பட்ட நிலையில் டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் பகுதிகளில் உள்ள ஆறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து ராணுவத்தினர் புத்தா ஜெயந்தி பூங்காவில் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement