எதிரெதிரே இருந்தாலும் பாதுகாப்பு தான்... - ஜப்பான் மதுபான விடுதியின் பலே ஐடியா..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனிமனித இடைவெளிக்காக யோசித்த ஜப்பான் மதுபான விடுதி ஒன்று, பெரிய கண்ணாடி டம்ளர்களை தொங்கவிட்டுள்ளன.


Advertisement

கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக கொரோனா என்ற வார்த்தையுடனேயே உலக நாடுகள் நாட்களை கடத்திக் கொண்டு இருக்கின்றன.
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா இன்று வரை உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றன. மக்களின் இயல்பு
வாழ்க்கையை புரட்டி போட்டது மட்டுமின்றி, உலக நாடுகளின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்து துறைகளையும்
பழிவாங்கியுள்ளது கொரோனா. இதற்கிடையே கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியிலும் உலக நாடுகள் தீவிரமாக இயங்கி
வருகின்றன.

image


Advertisement

பல மாதங்கள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த உணவகங்கள், கடைகள் எல்லாம் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளன. தனிமனித இடைவெளி வேண்டுமென்பதால் பல உணவங்கள் இருக்கைகளை குறைத்துள்ளன. இந்நிலையில் தனிமனித இடைவெளிக்காக யோசித்த ஜப்பான் மதுபான விடுதி ஒன்று பெரிய கண்ணாடி டம்ளர்களை தொங்கவிட்டுள்ளன.

image

பெரிய அளவிலான கண்ணாடி டம்ளர்கள் தலைகீழாக தொங்கினால் எப்படி இருக்கும்? அப்படியான வசதியை ஜப்பான் மதுபான விடுதி ஏற்படுத்தியுள்ளது. அங்கு வருபவர்கள் அந்த கண்ணாடி டம்ளருக்குள் இருப்பார்கள்.


Advertisement

image

இது ஒரு வகை தடுப்பு போல செயல்படும் என பார் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புதிய முறை வழக்கமானதாக இல்லையென்றாலும், பாதுகாப்பான ஒன்று எனவும், இதற்கு வரவேற்பு இருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement