ஜெட்வேகத்தில் உயர்ந்த ஃபேஸ்புக்கின் பங்குகள்- உச்சத்தில் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்ததால், அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மொத்த நிகரசொத்து மதிப்பு 102 பில்லியனாக உயர்ந்துள்ளது.


Advertisement

image

பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் கடந்த வியாழக்கிழமை 2.4 சதவீதமாக உயர்ந்தன. இதன் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் நிகர மதிப்பு 2.3 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் மூலம் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மொத்த நிகர சொத்து மதிப்பு 100 பில்லியனாக உயர்ந்தது. கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி அவரது மொத்த நிகரமதிப்பு 102 பில்லியனாக உயர்ந்துள்ளது. 


Advertisement

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், உலகிலேயே மூன்றாவதாக இந்தச் சாதனையை நிகழ்த்தும் நபராக மார்க் ஜுக்கர்பெர்க் உருவெடுத்துள்ளார். முன்னதாக பில்கேட்ஸ் 122 பில்லியனையும், ஜெஃப் பெசோஸ் 194 பில்லியனையும் கடந்து முன்னிலையில் உள்ளனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement