எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பர் என கணக்கிட்டுள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்).
தற்போது இந்தியாவில் மொத்தமாக சுமார் 1.39 மில்லியன் மக்கள் கேன்சரினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தரவுகளை அடிப்படையாக வைத்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது ஐ.சி.எம்.ஆர்.
இந்த 1.39 பில்லியன் மக்களில் சுமார் 27.1 சதவிகிதத்தினர் புகையிலை பயன்பாட்டினால் கேன்சர் நோய்க்கு ஆளாகியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது ஐ.சி.எம்.ஆர். அதற்கு அடுத்தபடியாக இரைப்பை மற்றும் மார்பக புற்றுநோயினால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிதித்துள்ளது.
வடகிழக்கு பிராந்தியத்தில் கேன்சர் நோய் பாதிப்பின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. பொதுவாக ஆண்களுக்கு நுரையீரல், வாய், வயிறு மற்றும் உணவுக்குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுவதாகவும், பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் புற்றுநோய் சார்ந்த பதிவேடுகளின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களும் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
‘புற்றுநோய் சிகிச்சையானது அண்மைய ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்படுவதால் குணப்படுத்தும் சதவீதமும் அதிகரித்துள்ளது’ என சொல்கிறார் மருத்துவர் பி.கே.ஜுல்கா.
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
டெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!