[X] Close >

பெங்களூரு கலவர வழக்கில் கைதான இளைஞர் உயிரிழப்பு

Youth-arrested-RELATED-TO-VIOLENCE-CASE-IN-Bengaluru-dies

கர்நாடக தலைநகரான பெங்களூருவில் கடந்த 11 ஆம் தேதி இரவு ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடையதாக 24 வயது இளைஞரான சயாத் நதீம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 


Advertisement

image

அவருக்கு வயிற்று பகுதியில் வலி இருந்த காரணத்தினால் மருத்துவனமையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் வயிற்றில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். 


Advertisement

சிறுபான்மை சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட போஸ்டை தொடர்ந்து பெங்களூருவில் கலவரம் வெடித்தது. அதனையடுத்து பெங்களூரு கே.ஜி.ஹல்லி பகுதியை சேர்ந்த நதீம் போலீசாரால் கடந்த 12 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

image

"அவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். வயிற்று வலி மற்றும் மூச்சுத் திணறல் சிரமத்தினால் கடந்த வெள்ளியன்று மருத்துவமனையில் அட்மிட்டான அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது” எனவும் அவருக்கு சிகிச்சை அளித்த போரிங் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


Advertisement

கலவர கும்பலை கட்டுப்படுத்த காவல்துறையினர் வீசிய கண்ணீர்ப்புகை குண்டு வெடித்ததன் விளைவாக கூட நதீம் வயிற்றில் காயமடைந்திருக்கலாம் என மருத்துவமனையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

image

இந்த கலவர வழக்கில் 240 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close