நீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெரம்பலூர் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்களை காப்பாற்றிய மூன்று பெண்களுக்கு வீரதீர செயல்களுக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி பாராட்டினார்.


Advertisement

பெரம்பலூர் அருகே கொட்டறை நீர்தேக்கத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய பவின்குமார், கார்த்திக் ஆகிய இரண்டு இளைஞர்களை ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்த வல்லி ஆகிய மூன்று பெண்களும் சேர்ந்து காப்பாற்றினர்.

image


Advertisement

இதையடுத்து இந்த செய்தி வெளியானவுடன் வீரதீர செயல்களுக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு இவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. அந்த மூன்று பெண்களையும் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் சாந்தா நேரில் அழைத்து பாராட்டி சென்னைக்கு வழியனுப்பி வைத்தார்.

image

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு கல்பனா சாவ்லா விருதினை வழங்கி 5 லட்ச ரூபாய் சன்மானமும் வழங்கி பாராட்டினார். துணிச்சலுடன் இளைஞர்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக இந்த விருது மூன்று பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement