“முதல்வர் வேட்பாளர் என்பது பொது வெளியில் எடுக்கும் முடிவு இல்லை” - ஆர்.பி. உதயகுமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முதல்வர் வேட்பாளர் என்பது பொது வெளியில் எடுக்கும் முடிவு இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னை திருவிக நகர் மண்டலத்தில் அயனாவரம் பகுதியில் வருவாய் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக ஒற்றுமையோடு இருக்கிறது. அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. எதிர் கட்சியினர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதிமுக செய்தித் தொடர்பாளர்களுக்கு ...


Advertisement

முதல்வர் வேட்பாளர் பொது வெளியில் எடுக்கும் முடிவு இல்லை. மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள். வரும் தேர்தலில் நாங்கள் செய்த சாதனையை மக்களிடம் எடுத்து சொல்லுவோம். எங்களால் பல சாதனை சொல்ல முடியும். எதிர் கட்சி எதை சொல்வார்கள்” எனத் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement