[X] Close

’எந்த பொதுமேடையிலும் இந்தியை மொழிப்பெயர்த்ததில்லை., நிரூபிக்க முடியுமா?’ - கனிமொழி கேள்வி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லிக்கு சென்று இத்தனை ஆண்டுகள் ஆனாலும் எனக்கு இந்தி தெரியாது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, “சென்னை விமான நிலையத்தில் தமிழ்மொழி அதிகம் தெரிந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பணியில் அமர்த்தப் படுவார்கள் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பது எவ்வளவு பெரிய அவமானம். ப.சிதம்பரம், குமாரசாமி உள்ளிட்டோர் தங்களுக்கே இதுபோன்று நடந்துள்ளது என பகிர்ந்துள்ளனர். டெல்லிக்கு சென்று இத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் இந்தி கற்றுக்கொள்ளவில்லை.

கனிமொழி எம்.பி.யிடம் மொழி குறித்து ...


Advertisement

தேவிலால் சென்னை வந்தபோது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க வில்லை. எந்த பொதுமேடையிலும் நான் இந்தி மொழிப்பெயர்த்ததில்லை. அப்படி மொழி பெயர்த்திருந்தால் நிரூபியுங்கள். நான் படித்த பள்ளியில் தமிழ் ஆங்கிலம் மட்டும்தான் இருந்தது. அதைத்தான் நான் கற்றுக்கொண்டேன். இந்தி தெரிந்தால்தான் மொழி பெயர்க்க முடியும். எனக்கு இந்தி தெரியாது” எனத் தெரிவித்தார்.

மேலும் பாஜகவுக்கு திமுகவுக்குதான் போட்டி என வி.பி துரைசாமி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கனிமொழி, சிலர் கனவு உலகத்தில் வாழவேண்டுமென்றால் வாழட்டும் எனத் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement