கைத்தறி ஆடைகளில் அன்பு இருக்கிறது; கைத்தறி நெசவாளர்களை காப்போம் – நடிகை சமந்தா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கைத்தறி ஆடைகள்தான் சிறந்தது, பாரம்பரியமானது என்று தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா. நமது  உள்ளூர் நெசவாளர்கள்  மற்றும்  கைவினை கலைஞர்களை, நம்மால் முடிந்த வழியில்  முயற்சி  செய்து  ஆதரிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Advertisement

image

தெலுங்கு நடிகர் ராணாவின் திருமண விழா புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை சமந்தா, அந்த நிகழ்வில் பாண்டுரு கைத்தறி புடவையை அணிந்திருந்தார். இதுபற்றி பதிவிட்டிருந்த அவர் “கைகளால் நெசவு செய்யப்பட்ட, கைவேலைப்பாடுகளால் ஆன பக்தியும், அன்பும் இந்த கைத்தறி புடவையில் பிணைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

சமந்தா  2017 ஆம் ஆண்டில் தெலங்கானா அரசாங்கத்தால் கைத்தறிகளின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார், அதன்பின்னர் கைத்தறி நெசவினை  தீவிரமாக ஊக்குவித்து வருகிறார் "நமது  உள்ளூர்  நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களை, நம்மால் முடிந்த வழியில் முயற்சி செய்து ஆதரிப்போம். நம்முடைய  அருமையான மரபுகளை உயிரோடு வைத்திருப்பதில்  அவர்கள்தான்  நமது கடைசி  நம்பிக்கையாகும்  ”என்று  தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

loading...
Related Tags : samanthaசமந்தா

Advertisement

Advertisement

Advertisement