[X] Close >

புதுக்கோட்டை: நிழற்கூடத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை கண்டெடுப்பு

new-born-baby-found-in-bus-stop-of-pudukottai

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கட்டைப் பையில் சுற்றியவாறு பயணியர் நிழற்கூடத்தில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் ஆலடிகொல்லையில் பயணியர் நிழற்கூடம் ஒன்று உள்ளது. அங்கு இருந்த ஒரு பையில் இருந்து திடீரென குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதையறிந்த அப்பகுதி இளைஞர்கள் அந்த பையை திறந்து பார்த்து உள்ளனர். அப்போது அந்த பையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது.

image


Advertisement

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து அப்பகுதி இளைஞர்கள் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் உடனடியாக அந்த குழந்தையை சிகிச்சைக்காக கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு குழந்தையும் நலமுடன் உள்ளது. மேலும் அந்த குழந்தைக்கு தேவையான பால் மற்றும் உடை மற்றும் கொசுவலை உள்ளிட்டவற்றை அந்தப் பகுதி இளைஞர்களே வாங்கிக் கொடுத்தனர்.

image

இதுகுறித்து வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் தொடர்ந்து குழந்தையை விட்டுச் சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close