சென்னையில் பயிற்சி: தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ள சிஎஸ்கே நிர்வாகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் பயிற்சி மேற்கொள்ள தமிழக அரசிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது


Advertisement

கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக ஐபிஎல் அணிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் வழக்கத்திற்கு மாறான பல பாதுகாப்புகளும், திட்டங்களும் இந்தமுறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது.

image


Advertisement

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு முன்னதாக சென்னையில் ஒரு வார கால பயிற்சி முகாமில் சென்னை அணி வீரர்கள் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சென்னை அணி வீரர்கள், நிர்வாகத்தினர், பயிற்சியாளர்கள் தவிர்த்து மைதானத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படாமல் பயிற்சி மேற்கொள்ள சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

image

இதற்காக தமிழக அரசிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. மிக விரைவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 14ம் தேதி சென்னை அணியை சேர்ந்த இந்திய வீரர்கள் அனைவரும் சென்னை வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement