சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை சீன ராணுவம் அழித்துள்ளதை அடுத்து அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய பக்தர்கள் சீன எல்லையில் உள்ள மானசரோவர் கைலாய மலைக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். வழியில் உள்ள பாலம் உடைந்துவிட்டதாகக் கூறி அதற்கு சீனா திடீரென அனுமதி மறுத்தது. இந்த பிரச்சினை தொடர்பாக இந்திய அரசுடன் பேசி வருவதாக, சீனா தெரிவித்தது.
இந்த நிலையில் சிக்கிம் மாநிலம், டோகா லா அருகேயுள்ள லால்டென் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, 2 இந்திய ராணுவ பதுங்கு குழிகளை அழித்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்துள்ளது. இந்திய ராணுவத்தினர் மனித சுவராக நின்று அவர்களைத் தடுத்துள்ளனர். இதன் காரணமாக எல்லை பகுதியில் பதற்றம் உருவாகி உள்ளது.
1962 ம் ஆண்டு நடந்த இந்தியா–சீனா போருக்கு பிறகு இந்த பகுதி இந்திய–திபெத் எல்லை பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!