பெண் கைதி சாவு - அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மும்பை பைகுல்லா சிறையில் பெண் கைதி மர்மச்சாவு அடைந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக சிறை அதிகாரிகள் 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

மும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீபா என்ற பெண் கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரை சிறை அதிகாரிகள் அடித்து கொன்று விட்டதாக மற்ற பெண் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறை கட்டிடத்தின் மேற்கூரையில் மீது ஏறி நின்ற ஏராளமான பெண் கைதிகள் போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். சிறை வளாகத்தில் உள்ள பொருட்களை சூறையாடியும், ஆவணங்களை எரித்தும் பெண் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் கலவரத்தை கட்டுப்படுத்த வந்த சிறை காவலர்களுடனும் பெண் கைதிகள் பயங்கர மோதலிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக பைகுல்லா சிறையில் பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் பெண் கைதி மர்ம மரணம் தொடர்பாகவும், கலவரம் தொடர்பாகவும் விசாரணை நடத்திய சிறைத்துறை நிர்வாகம், சிறைத்துறையைச் சேர்ந்த 12பேரை அதிரடியாக பணி இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் சிறைத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் 6பேர் மீது தற்போது கொலை வழக்கும் பதிவு செய்துள்ளது. அதிகாரிகளின் ஊழலையும், முறைகேடுகளையும் வெளிப்படுத்தப்போவதாக பெண் கைதி கூறியதால் அவரை அதிகாரிகள் அனைவரும் அடித்தே கொன்று விட்டதாக சக பெண் கைதிகள் தெரிவித்துள்ளனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement