அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
2015ம் ஆண்டு தீபாவளிக்கு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வேதாளம். ஷ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவான திரைபடத்தை இயக்குநர் சிவா இயக்கி இருந்தார். செண்டிமெண்ட் காட்சிகள், அதிரடி சீன்ஸ் என வேதாளம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தமிழில் வெற்றி பெற்ற வேதாளத்தின் ரீமேக்கில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கப்போவதாகவும், ஜில்லாவை இயக்கிய நேசன் படத்தை இயக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் தெலுங்கில் வேதாளம் ரீமேக் செய்யப்படுவது உறுதி என்றும் ஆனால் பவன் கல்யாண் நடிக்கப்போவதில்லை என்றும் அவரது சகோதரர் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப்படத்தை மேகர் ரமேஷ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாக நிலையில் சிரஞ்சீவி பிறந்த நாளான ஆகஸ்ட் 22ம் தேதி இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது
Loading More post
பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்
5 மாதங்கள்... 68 கட்டங்கள் : சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் - 1951
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!