கேரள விமான விபத்து - விமானிகளின் உரையாடலைப் பதிவு செய்த CVR கருவி கண்டெடுப்பு

Kerala-plane-crash-Discovery-of-CVR-instrument-that-recorded-the-conversation-of-the-pilots

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டியும், விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடலைப் பதிவு செய்த CVR கருவியும் கண்டறியப்பட்டுள்ளது. 


Advertisement

image

துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி இராண்டாக உடைந்தது. இதில் ஒரு குழந்தை, விமானிகள் உட்பட 17 உயிரிழந்தனர். மேலும் 123 பேர் காயமடைந்துள்ளதாகவும் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட தகவல் அறிக்கையில் விமானத்தின் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டதால் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டியும், விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடலைப் பதிவு செய்த CVR கருவியும் கண்டறியப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement