[X] Close >

பைக்கில் வந்த ‘புஷ்.. புஷ்’ சத்தம்.. சீட்டை திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Snakes-invading-Cuddalore-----Advice-to-be-safe----

கடலூரில் இரண்டு சக்கர வாகனத்தின் சீட் கீழ் பகுதியில்தங்கி இருந்த நல்ல பாம்பு நத்தம் கிராமத்தையே மிரட்டிய நல்ல பாம்பு.


Advertisement

image
கடலூர் உண்ணாமலை செட்டிவாடி பகுதியில் செல்வம் என்பவர் தனது இரண்டு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்துள்ளார். அப்போது இரண்டுசக்கர வாகனத்தில் இருந்து காத்து போவதுபோல் புஷ் புஷ் என்று சத்தம் வந்துள்ளது.

சந்தேகம் அடைந்தவர்கள் வாகனத்தை சுற்றிப்பார்த்த போது வகனத்தில் இருந்த சீட்டின் அடிப்பகுதியில் நல்ல பாம்பு ஒன்று இருந்துள்ளது இதனையடுத்து உயிரின ஆர்வலர் செல்லாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


Advertisement

image
அவர் வந்துசீட்டின் கவரை முழுவதும் அகற்றி அதில் இருந்த நல்லபாம்பை பிடிக்க முயற்சித்துள்ளார் அப்போது பாம்பு படமெடுத்து மிரட்டியுள்ளது. நீண்ட போரட்டதிற்கு பிறகு அந்த பாம்பை பிடித்து சென்று காப்புகாட்டில் விட்டார்.


செல்லா கூறுகையில், இந்த பாம்பு எத்தனை நாட்கள் அந்த வாகனத்தில் பயணித்தது என்று யாருக்கும் தெரியாது. இருட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு மீண்டும் எடுக்கும்போது முழுமையாக ஒருமுறை சோதித்துப் பார்த்துவிட்டு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

image
இது இப்படி இருக்க நத்தம் கிராமத்தில் பாம்பு ஒன்று கமலகண்ணன் என்பவர் வீட்டிற்குள் செல்ல முயற்சித்துள்ளது. இதுகுறித்து உடனே உயிரின ஆர்வலர் செல்லாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர் அங்கு விரைந்து வந்த செல்லா பாம்பை பிடிக்க முயற்சித்தார் அப்போது பாம்பு படமெடுத்து ஆடியது.


Advertisement


இதனை பார்த்த கிராம மக்கள் ஆடி மாதத்தில் பாம்பை ஒன்றும் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர். அதனால் பாம்பை பத்திரமாக பிடித்துச் சென்று காப்புக்காட்டில் விட்டார். கடலூர் பகுதியில் பல இடங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது

வீடியோ

Related Tags : கடலூர்Cuddalore
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close