கொரோனா பாதித்த வீட்டில் திருடன் கைவரிசை... பொள்ளாச்சி அருகே பரபரப்பு

Police-nab-thief-who-stole-jewelery-and-TV-near-Pollachi----

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தங்கநகை மற்றும் டிவியை எடுத்துச் சென்ற திருடனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.image
பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்த (41) வயது மதிக்கத்தக்க நபருக்கு கடந்த 24-ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருந்ததால் நான்குபேரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 


Advertisement

image
நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த நால்வரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க மோதிரம் தங்க கம்மல் உட்பட மூன்றேகால் பவுன் நகைகளும் ஒரு டிவியும் காணாமல் போயிருந்தது.

image
இதனையடுத்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்த கிணத்துக்கடவு போலீசார் நகை மற்றும் ,டிவியை திருடிய திருடனை வலைவீசி தேடிவருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement