தெலங்கானா: சிபிஎம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ சுன்னம் ராஜையா கொரோனாவுக்கு உயிரிழப்பு

Ex-CPM-MLA-from-Telangana-Sunnam-Rajaiah-dies-of-corono

பழங்குடியினர் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவந்த தெலங்கானா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ சுன்னம் ராஜையா கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று இரவு உயிரிழந்தார்.


Advertisement

image

59 வயதான சுன்னம் ராஜையா மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். தொடர் போராட்டங்கள் மற்றும் எளிமையான தலைவர் என்ற முறையில் அனைவருக்கும் அறிமுகமானவர் இவர். இவருக்கு அவ்வப்போது உடல்நலக்கோளாறுகள் இருந்து வந்ததால் விஜயவாடாவில் சிகிச்சை பெற்றுவந்தார். மேலும்  நீரிழிவு நோய் மற்றும் இதய நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். மலேரியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதி கடந்த 20 நாட்களாக சிகிச்சைப் பெற்றுவந்த இவருக்கு நேற்றுதான் கொரோனா தொற்று உறுதியானது, இந்நிலையில் நேற்று இரவு இவர் காலமானார். இவரின் மரணத்துக்கு தெலங்கானா முதல்வர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பழங்குடி மக்களுக்காக போராடி பல்வேறு சட்ட உரிமைகளை பெற்று தந்தவர் இவர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement