மாணவிகளுக்கு நாப்கின் வழங்குவது குறித்து அரசு திட்டமிட வேண்டும் - உயர்நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படாமல் உள்ள முட்டைகளை அவர்களின் பெற்றோர் மூலமாக வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், மாணவர்களை தினமும் பள்ளிகளுக்கு அழைத்து முட்டை வழங்குவது பாதுகாப்பாக இருக்காது எனவும், முட்டை கொள்முதல் செய்வதிலும் சில இடர்பாடுகள் இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஏற்கனவே சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கிவந்த முட்டைகள் ஊரடங்கு சூழலால் தடைபட்டு விடக்கூடாது என்பதால் மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து முட்டை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

image


Advertisement

மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம் எனவும் தெரிவித்தனர். முட்டைகளை தினம்தோறும் வழங்குவதா, வாரம்தோறும் மொத்தமாக வழங்குவதா போன்றவற்றை அரசே முடிவெடுத்துக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் எப்படி வழங்குவது என்பதையும் அரசு திட்டமிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ராமர் கோயில் இப்படிதான் இருக்கும் ? : மாதிரி புகைப்படம் வெளியீடு

loading...

Advertisement

Advertisement

Advertisement