சாலை வசதி இல்லை: கர்ப்பிணி பெண்ணை தூளிகட்டி ஆற்றைக் கடந்து தூக்கிச்சென்ற மக்கள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சத்தீஸ்கர் மாநிலத்தில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை தூளிகட்டி தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் காட்டுப் பகுதிகளைக் கொண்டுள்ள சத்தீஸ்கரின் மாநிலத்தின் சுர்குஜா மாவட்டத்திலுள்ள கட்னாப் கிராமத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது.  


Advertisement

image

அந்த வீடியோவில் நான்கு ஆண்கள் ஒரு நீளமான கட்டையில் ஒரு துளிகட்டி கர்ப்பிணி பெண்ணை அமரவைத்து ஆற்றைக் கடக்கும் காட்சி பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது. இப்போது, ஆற்றைக் கடந்து, அப்பெண் பத்திரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ’செயற்கைக்கோள்கள் அனுப்பும் நாட்டில்தான் சாலை வசதிகள் கூட இன்னும் அமைக்கப்படவில்லை’ என்ற விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர்.


Advertisement

 

https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2FANI%2Fstatus%2F1289697598807269378&widget=Tweet

 


Advertisement

  “ஒருசில தொலைதூர கிராமங்களுக்கு மழை நாட்களில் பயணம் செய்வது கடினம். இதுபோன்ற இடங்களுக்கு மக்களைச் சென்றடைய சிறிய கார்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் கார்கள் வழியாக மக்களின் குடியிருப்புகளை அடைய முடியாது. ஆனால் தேவைப்படும் மக்களுக்கு உதவ முடிந்தவரை அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் செல்ல முயற்சிப்போம்” என சுர்குஜா மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் ஜா தெரிவித்துள்ளார்

loading...

Advertisement

Advertisement

Advertisement