ஜம்மு - காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் மரணம்: ஸ்டாலின் இரங்கல் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஹத்துவா மாவட்டத்தில் நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் சீரிய பணியில் ஈடுபட்டிருந்த தமிழக வீரர் எஸ்.திருமூர்த்தி வீரமரணம் அடைந்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்" ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஹத்துவா மாவட்டத்தில் நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் சீரிய பணியில் ஈடுபட்டிருந்த தமிழக வீரர் எஸ்.திருமூர்த்தி வீரமரணம் அடைந்தார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். தனது 21-வது வயதில் எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்து - தற்போது ஹவில்தாராக தியாக உணர்வுடன் பணியாற்றிய அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


Advertisement

image

அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டு, திருமூர்த்தி அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், நிதியுதவியும் வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் ஸ்டாலிலன்.

loading...

Advertisement

Advertisement

Advertisement