இளைஞர்கள் மாதத்தில் ஒரு நாளாவது கிராமங்களுக்கு செல்ல வேண்டும் - ஜகி வாசுதேவ்

youths-go-to-village-atleast-monthly-once-says-jaki-vasudev

இளைஞர்கள் மாதத்தில் ஒரு நாளாவது கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என ஜகி வாசுதேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Advertisement

ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ் மக்கள் அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நம் தமிழ் கலாச்சாரத்தில் ஆடிப்பெருக்கு என்பது மிகவும் முக்கியமான நாளாகும். இது மழை, நீர் மற்றும் மண்ணுடன் தொடர்புடைய ஒரு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

இப்போது ஆறுகளில் புதுவெள்ளம் பொங்கிப் பாயும் நேரம். இந்த வருடத்தில் நன்றாக மழை பெய்துள்ளது. ஆறுகள் முழுமையாக ஓடுகின்றன. ஆனால், இந்த ஆறுகள் எப்போதும் இப்படியே இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். நம் கலாச்சாரத்தையும் விவசாயத்தையும் ஆரோக்கியத்தையும் அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கு எடுத்து செல்ல நம் மண்ணையும் ஆறுகளையும் காப்பாற்ற வேண்டும்.


Advertisement

கர்நாடகாவும், தமிழ்நாடும் மீண்டும் ...

காவேரி நதிபடுகைகளில் இருக்கும் நம் விவசாயிகள் ஒரு கோடியே 10 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளனர். இந்தப் பணியில் நீங்கள் அனைவரும் உங்களால் எந்தளவுக்கு முடியுமோ, அந்தளவுக்கு ஈடுபட வேண்டும்.

தமிழ் இளைஞர்களை நான் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் மாதத்தில் ஒரு நாளாவது கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும். கிராமங்களில் என்ன நடக்கிறது, அங்குள்ள மக்கள் எப்படி வாழ்கிறார்கள், விவசாயம் எப்படி நடக்கிறது என்பதையெல்லாம் நீங்கள் கவனிக்க வேண்டும். இது மிக மிக தேவையானது.” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement