பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர், ஹெச்.வினோத் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்ததன் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். இதே நடிகர் - இயக்குநர் காம்போவில் வெளிவரவிருக்கும் ‘வலிமை’ படத்தையும் தயாரித்துக் கொண்டுள்ளார்.
இப்போது தல அஜித்தின் ப்ளாக்பஸ்டர் படங்களான எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த ‘வாலி’ படத்தையும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘வரலாறு’ படத்தையும் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.
ஆனால் இந்த தகவல்கள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. வாலி மற்றும் வரலாறு மீதான ரீமேக் செய்யும் உரிமம் இன்னும் அவருக்கு கிடைக்கவில்லை. இப்போது வலிமை படத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் எனவும் கூறப்படுகிறது.
இப்போது ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘கோமாளி’ படத்தின் ரீமேக் உரிமையை இவர் பெற்றுள்ளார். மேலும் ஆயுஷ்மான் குர்ரானாவின் ஹிட் படமான ‘பதாய் ஹோ’வை தமிழில் ரீமேக் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே வலிமை படத்தை இந்தியிலும் தயாரித்து, இரண்டு மொழிப்படமாக வெளியிடப்படும் என தகவல்கள் வந்துள்ளன. இந்தியில் வெளியிடுவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கொரோனாவால் நாடு முழுவதுமே ஸ்தம்பித்துள்ளது. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பெரிய பெரிய படங்களைக் கூட வெளியிடதயாராக இல்லை. தென்னிந்தியப் படங்களுக்கு இந்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
சிறந்த நடிகர் மற்றும் குழுவினரைக் கொண்டிருப்பதால் வலிமை படம் தயாரிக்கும் செய்தி வெளியானதிலிருந்து, படத்தை டப் செய்து திரையரங்குகளில் வெளியிட கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே போனி கபூரும் இந்த படத்தை இந்தியில் டப்பிங் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறார். விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
"இது மலிவான செயல் பெய்ன்..." - அஸ்வின் விவகாரத்தில் கொதித்த கிரேக் சேப்பல்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு