Advertisement

உல்லாச வாழ்க்கைக்காக கொள்ளையனாக மாறிய ஓட்டுநர். - பூட்டிய வீடுகளில் நோட்டமிட்டு திருட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகை மற்றும் 25000 பணம் கொள்ளை போன வழக்கில் தேடப்பட்ட வந்த நபர் கைது. அவரிடமிருந்து 40 சவரன் தங்க நகை, ஒரு டிவி, மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல்.


Advertisement

image

image 1
சென்னை வேளச்சேரி, தண்டீஸ்வரர் நகர், 6வது பிரதான சாலை, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஊரடங்கின் காரணமாக குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தனர். இந்நிலையில் கடந்த 11ம் தேதி சேலையூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு விக்னேஷ் சென்றுவிட்டு 19ம் தேதியன்று வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகை மற்றும் 25000 ரூபாய் பணம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.


Advertisement

image

image 2
இது குறித்து வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளை பதிவு செய்தனர்.
வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து வேளச்சேரி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது வேளச்சேரி ஜெகந்நாதபுரம், தண்டீஸ்வரத்தில் வசித்து வந்த ஓட்டுநர் பிரபு என்பதும், அவர் கடந்த 2 வருடங்களாக அதேபகுதியில் வசித்து வந்து பகலில் நோட்டமிட்டு, இரவில் பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது. இவனது சொந்த ஊர் திருவண்ணாமலை. வேளச்சேரியில் மட்டும் இதுவரை 5 வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளான். 

image


Advertisement

image 3

அவனிடனிருந்து 40 சவரன் தங்க நகை, ஒரு டிவி, மற்றும் வெள்ளி பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பூட்டை உடைக்க பயன்டுத்திய பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். திருடிய நகைகளை விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கொள்ளையன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Related Tags : சென்னைChennai
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement