அது என் சொந்த முடிவு - மூக்கு அறுவை சிகிச்சை குறித்து பேசிய ஸ்ருதிஹாசன்

Shruti-Haasan-on-plastic-surgery-and-beauty-standards-of-film-industry

மூக்கில் செய்துகொண்ட பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் பேசியுள்ளார்.


Advertisement

நடிகை ஸ்ருதிஹாசன் தன் மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். அதை அவரே தெரிவித்துள்ளார். இந்நிலையில் மூக்கில் செய்துகொண்ட பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு பேசியுள்ளார். அதில், திரையுலகில் அழகு தொடர்பான ஓர் அழுத்தம் இருந்ததாகவும், ஆனால் அழகு தொடர்பான எதுவாக இருந்தாலும் நாம் சொந்தமாக எடுக்கவேண்டிய முடிவுதான் என்றும் தெரிவித்துள்ளார்.

image


Advertisement

மேலும், திரையுலகில் அழகு தொடர்பான ஓர் அழுத்தம் இருக்கவும் செய்கிறது. இல்லாமலும் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு அழுத்தம் எனக்கும் இருந்தது. ஆனால் என் மூக்கில் நான் செய்துகொண்ட அறுவை சிகிச்சை என்பது நானே எடுத்த முடிவு. என் முதல்படத்திற்கு பிறகு என் மூக்கு உடைந்தது. அதைப் பார்க்க எனக்கு பிடிக்கவில்லை. அந்த உணர்வும் பிடிக்கவில்லை. அதனால் சொந்த விருப்பத்தின்பேரில் நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அறுவை சிகிச்சை செய்துகொள் என யாரும் என்னிடம் கேட்டுக்கொள்ளவில்லை.

image

என் முகம் மேற்கத்திய முகம், கூர்மையான முகம் போன்ற விமர்சனங்களை கேட்டுள்ளேன். அதை நான் சரி செய்தேன். இதை நான் வெளிப்படையாகவே கூறுகிறேன். அதனால் நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை ஊக்குவிக்கவில்லை. அதே நேரத்தில் அது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்துள்ளார்


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement