மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை: குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.


Advertisement

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்தாண்டு சீசன் கடும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது ஒருபுறமிருக்க, தென்மேற்குப் பருவமழை துவங்கி 2 மாதங்கள் முழுமையாக நிறைவடைய உள்ள நிலையில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய நாட்கள் மட்டுமே மழை பெய்தது.

இதனால் அருவிகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. குற்றாலத்திற்கே உரித்தான இதமான சூழலும் நிலவவில்லை. வாரத்தில் பெரும்பாலான நாட்களில் வெயில் கொளுத்தி வந்தது.


Advertisement

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை முதல் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் உட்புறத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மாவட்டம் முழுவதும் சாரல் மழையும் இதமான சூழலுமாக நிலவுவதால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

loading...

Advertisement

Advertisement

Advertisement