பூங்காவில் சுவர் ஏறிக்குதித்த மாணவர் : தலையில் அடிபட்டு பரிதாப மரணம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் பூங்காவில் விளையாட சென்று சுவர் ஏறிக்குதித்த மாணவர் தலையில் அடிப்பட்டு உயிரிழந்தார்.


Advertisement

சென்னை அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ஜெகதீசன் (16). இவர் 10ஆம் வகுப்பு படித்துவிட்டு பள்ளிகள் திறப்பிற்காக காத்திருந்தார். இந்நிலையில், ஜெகதீசன் நண்பர்களுடன் விளையாடுவதற்காக, அம்பத்தூர் விஜிஎன் சாந்தி நகரில் உள்ள பூட்டியிருந்த பூங்காவிற்குள் சுவர் ஏறி குதித்துள்ளார். அப்போது கீழே விழுந்ததில் பின் தலையில் அடிபட்ட அவர் அங்கேயே மயங்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

image


Advertisement

அவர்கள் விரைந்து வந்து ஜெகதீசனை மீட்டு அம்பத்தூரில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு செய்த பிறகு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு மாணவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர் பூங்காவில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணி நேரத்தில் பாரில் மது அருந்திய விவகாரம் : விருதுநகரில் சிறப்பு எஸ்.ஐ சஸ்பெண்ட்

loading...

Advertisement

Advertisement

Advertisement