’ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் சிக்கிய ஒரு கிலோ தங்கம்’ விசாரணை அதிகாரிகள் பறிமுதல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தொடர்பான புதிய தகவல்கள் கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாக வந்துகொண்டே இருக்கின்றன.


Advertisement

ஏற்கெனவே ஸ்வப்னாவின்  சினிமா தொடர்பும் அம்பலமாகியது. தங்கக் கடத்தலில் கிடைத்த பணத்தைக்கொண்டு நான்கு மலையாளத் திரைப்படங்களை பினாமி பெயரில் தயாரித்துள்ளதாக தெரியவந்தது. இந்த நிலையில், தேசிய புலனாய்வுக் குழுவினரால் ஸ்வர்பனாவின் வங்கி லாக்கரில் இருந்து ஒரு கிலோ தங்கமும் ஒரு கோடி ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

image


Advertisement

கடத்தல் வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணையில் ஸ்வப்னா, தங்கக் கடத்தலில் சம்பாதித்த பணத்தை வங்கி லாக்கரில் வைத்துள்ளதாக அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். அதாவது, ஜூலை 5 ஆம் தேதியன்று திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் கைப்பற்றிய தங்கம் மூலம் இந்த கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement