[X] Close

டிஸ்சார்ஜ் ஆன சில மணி நேரங்களுக்குள் 12 பேருக்கு மீண்டும் கொரோனா பாசிட்டிவ்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜம்மு பிராந்தியத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சிலருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் என வந்து டிஸ்சார்ஜ் ஆனபின்பு மீண்டும் பாசிட்டிவ் என வந்ததால் மருத்துவமனைக்கு திரும்ப அழைக்கப்பட்டனர்.


Advertisement

ஜம்மு மாநிலத்தில் குளிர்பான ஆலை ஒன்றில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 15 பேருக்கு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஜூலை 17 அன்று 15 பேரின் மாதிரிகளை பரிசோதித்ததில் முடிவு நெகடிவ் என வந்தன. அதே நாளில், சுகாதாரத்துறை  அதிகாரிகள் அவர்களது மாதிரிகளை மீண்டும் இரண்டாவது சோதனைக்கு எடுத்துக் கொண்டனர். ஆனால் பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பு, மருத்துவ நிர்வாகம் அவர்கள் அனைவரையும் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி விட்டனர்.  ஜூன் 17 அன்று மாலை பரிசோதனை முடிவு வந்தபோது, 15 தொழிலாளர்களில் 12 பேருக்கு ‘பாசிட்டிவ்’ என இருந்ததால் மருத்துவ பணியாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.


Advertisement

imageஇதையடுத்து  12 பேரையும் தேடும் பணியில் சுகாதரத்துறை மும்முரமாக இறங்கினார். அதற்குள், அவர்களில் சிலர் வேறு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். அவர்களை தொடர்புகொண்ட சுகாதாரத்துறையினர் பாசிட்டிவ் வந்த விஷயத்தை சொல்லாமல் எக்ஸ்ரே ஒன்று எடுக்க வேண்டும் என்றுகூறி மருத்துவமனைக்கு வரவழைத்து, அதன் பின்னரே பரிசோதனை முடிவுகளை காண்பித்துள்ளார். தற்போது 12 பேரும் மருத்துவமனையில் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பரிசோதனை முடிவு ‘நெகட்டிவ்’ என வந்ததின் அடிப்படையிலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. ஆனால்  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை பத்து நாட்களுக்கு பின் பரிசோதிக்கும் போது முடிவு நெகட்டிவ் என வந்தாலும் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து டெஸ்ட் எடுத்து கண்காணிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்  இருக்கும்நிலையில் ஜம்முவில் உடனே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement