வாய்ப்பகுதியில் மின்னும் விளக்குகள்: கவனம் ஈர்த்த எல்இடி மாஸ்க்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேற்கு வங்கத்தில் ஒருவர் எல்இடி பொருத்தப்பட்ட மாஸ்கை அணிந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


Advertisement

உலகமே கொரோனாவால் ஸ்தம்பித்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம் இது. வெளியே செல்லும்போது நம்மை பாதுகாக்க மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. நம் வாழ்க்கைமுறையில் மாஸ்க் என்பதும் கட்டாயமாகியுள்ளது. இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அடிக்கடி விதவிதமான வித்தியாசமான மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

image


Advertisement

விலையுயர்ந்த ஃபேப்ரிக்குகளில் ஆரம்பித்து வெள்ளி, தங்கம், வைரம் என மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு அவ்வப்போது மக்களை கவர்ந்து வருகின்றன. அதேபோல் அவரவர்களின் முகத்தின் பாதியை மாஸ்குகளில் பிரிண்ட் செய்தும் விற்று வருகிறார்கள். உடை கலர்களுக்கு ஏற்ப வண்ணவண்ணமாக மாஸ்குகளும் சந்தைக்கு வந்துவிட்டன. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஒருவர் எல்இடி பொருத்தப்பட்ட மாஸ்கை அணிந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

image

அவர் தொடர்பாக வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்கு வங்கத்தின் காஞ்சரப்பாராவைச் சேர்ந்த கார்நாத் என்பவர் எல்இடி மாஸ்கை அணிந்து நடமாடிக் கொண்டு இருக்கிறார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், மாஸ்கின் தேவையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது குறித்த விழிப்புணர்வுக்காகவே மாஸ்கில் எல்இடி பொருத்தியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கார்நாத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement