8 இலட்சம் சதுரஅடி ஐ.டி பார்க் இடங்கள் காலி : கொரோனாவுக்கு பின் மாறிய சென்னை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏற்பட்ட ‘வீட்டிருந்தே வேலை’ மற்றும் செலவு குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக,  கடந்த 100 நாட்களில் மட்டும் சென்னையிலுள்ள ஐடி பார்க்களில் எட்டு இலட்சம் சதுர அடி அலுவலக இடங்கள் காலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

image

2019-ஆண்டு முதலே பல நிறுவனங்கள் பகுதியளவு இடங்களை காலிசெய்து வந்தன. கொரோனாவுக்கு பிறகு அது வேகமெடுத்துள்ளது. ஸ்டார்டப் நிறுவனமான சார்ஜ்பீ பெருங்குடியில் உள்ள 40 ஆயிரம் சதுர அடி இடத்திலிருந்து வெளியேறியது. அந்நிறுவனம் வேறு பொருத்தமான இடத்திற்கு மாறப்போவதாகவும் அறிவித்துள்ளது. யுனிமோனி குளோபல் பிசினஸ் சர்வீஸஸ் எனப்படும் மணி டிரான்ஸ்பர் நிறுவனம் மணப்பாக்கத்திலுள்ள 83 ஆயிரம் சதுர அடி இடத்தை காலி செய்துள்ளது.


Advertisement

சதர்லேண்டு நிறுவனம் பெருங்களத்தூரிலுள்ள 55 ஆயிரம் சதுர அடி இடத்தை திரும்பக் கொடுத்துள்ளது. மேலும் ஆட்டோபார்ட்ஸ் தயாரிக்கும் வாப்கோ நிறுவனம் தரமணியிலுள்ள 46 ஆயிரம் சதுர அடி இடத்திலிருந்து வெளியேறியுள்ளது. பாரத் மேட்ரிமோனி நிறுவனமும் அடையாறு மற்றும் எம்.ஆர்.சி நகரில் உள்ள தனது அலுவலகங்களை காலிசெய்துள்ளது, இதற்கு பதிலளித்துள்ள அந்நிறுவனம் “ எங்கள் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுகிறார்கள், அதனால் இந்த இடங்களை காலிசெய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

பெரும் நிறுவனங்கள் இந்த இடங்களை காலிசெய்துள்ள காரணத்தால் நிறைய சிறிய ஐடி நிறுவனங்கள், இ-காமர்ஸ் நிறுவனங்கள் போன்றவை இனி இந்த இடங்களில் தங்கள் நிறுவனங்களை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் ஐடி பார்க் நிர்வாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

loading...

Advertisement

Advertisement

Advertisement