கொரோனா தடுப்பு மருந்தில் மூன்றாம்கட்ட மனித சோதனை: தீவிரம் காட்டும் சீன நிறுவனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீனாவைச் சேர்ந்த சினோபார்ம் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தொடர் பரிசோதனைகளின் அடிப்படையில், மூன்றாவது கட்ட சோதனையை மனிதர்களிடம் தொடங்கியுள்ளது.


Advertisement

அபுதாபியியைச் சேர்ந்த 15 ஆயிரம் தன்னார்வலர்களைத்  தேர்ந்தெடுத்து சோதனை முறையில் புதிய மருந்தைச் செலுத்தவுள்ளனர். அங்குள்ள செயற்கை நுண்ணறிவு - கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனம் மற்றும் அபுதாபி அரசு சுகாதாரத்துறையுடன் இணைந்து சினோபார்ம் மூன்றாம் கட்ட சோதனையை நடத்துகிறது. 

புதின் கிழமையன்று தொடங்கிய இந்த ஆய்வு, உலகின் முதல் செயலற்ற தடுப்பூசியின்  மூன்றாம் கட்ட சோதனை  என்கிறார்  ஜி42 ஹெல்த்கேர் தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ் கோஷி. அதாவது செயலற்ற தடுப்பூசிகள் நன்கு அறியப்பட்டவை.இன்ஃப்ளூயன்ஸா மற்றும் அம்மை போன்ற நோய்களுக்கு எதிராக  அவை பயன்படுத்தப்படுகின்றன. 


Advertisement

இதுவரை கொரோனா தடுப்பூசிகள் வணிக பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை. தடுப்பு மருந்து உருவாக்கத்தில் உலகம் முழுவதும் 23 சாத்தியமான தடுப்பூசிகள் மனித சோதனைகளில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றில் மூன்று, பெரிய அளவிலான தாமதமான சோதனை மற்றும்  மூன்றாம்கட்ட செயல்திறனைச் சோதிக்கும்  சோதனைகளில்  உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 


Advertisement

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement