தைரியமாகச் சொல்லுங்கள்.. “ஆம் எனக்கு கொரோனாதான்...”- பகுதி 2

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் தனக்கு தொற்றிவிட்டது என்ற அவமானத்திலும் பயத்திலும், தனக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்திலும் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் அநேகர். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் பலரும் உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும்,தன்னம்பிக்கை இழந்து, கூடுதல் பாதிப்புக்கு ஆளாவதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். இந்த நிலையை எப்படி கையாள வேண்டுமென மருத்துவர் ராமானுஜம் தெரிவித்துள்ளார்.


Advertisement

''பண்டைக் காலங்களில் நம் ஊரில் அவமானப்படுத்துவதற்குக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கழுதை மேல் ஏற்றி அனுப்பி வைப்பார்கள். பண்டைய கிரேக்கத்திலும் அதுபோன்றே குற்றவாளிகளை அவமானப்படுத்த முகத்தில் சூடு போட்டுத் தழும்பு உண்டாக்குவார்கள். அதற்கு ஸ்டிக்மா என்று பெயர். ஆங்கிலத்தில் சமூக ரீதியாக அவமானச் சின்னமாகக் கருதப்படும் விஷயங்களை ஸ்டிக்மா என அழைக்கிறார்கள். இது நோய்களுக்கும் பொருந்தும்.

image


Advertisement

சில நோய்களை மக்கள் அவமானச் சின்னமாகக் கருதினார்கள், இப்போதும் கருதுகிறார்கள். உதாரணம் தொழுநோய் , ஹெச்.ஐ.வி. போன்ற நோய்கள். இவை ஒருகாலத்தில் அவமானமாகக் கருதப்பட்டு அந்த நோய் இருப்பவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். தற்போது இந்தப் பட்டியலில் கொரோனாவும் இடம் பெற்றிருக்கிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கிவைப்பது, இந்நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களை வீட்டைக் காலி செய்யச் சொல்வது, இந்நோயால் இறந்த மருத்துவரின் உடலைப் புதைக்கக்கூட விடாமல் தடுப்பது எனப் பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன இக்கால கட்டத்தில். இதனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடையும் மன உளைச்சல் சொல்லிமாளாது.

image


Advertisement

இந்நோய் இருப்பதை வெளியில் சொல்லவும் அஞ்சுகிறார்கள். இதனால் லேசான அறிகுறிகள் இருக்கும்போதே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுக்கத் தயங்கி நோய் தீவிரம் அடைந்ததுமே செல்கிறார்கள் சிலர். இதனால் அவர்களுக்கு உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. தனக்குக் கொரோனா வந்திருப்பது உறுதியானது தெரிந்து தற்கொலை செய்து கொண்ட  அதிர்ச்சிகரமான செய்திகளை அன்றாடம் பார்க்கிறோம். இதற்கெல்லாம் மூலகாரணம்  நோயைப் பற்றிய பயமும் அறியாமையுமே. இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.

image

(மருத்துவர் ராமானுஜம்)

அறியாமையே பயத்துக்கு ஊற்றுக்கண் ஆகும். அறியாமையைப் போக்குவதற்கு விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். இந்த நோய் பரவும் விதத்தைப் பற்றியும் நோயின் தன்மைகளைப் பற்றியும் மக்களிடம் இன்னும் அதிகமாக விழிப்புணர்வை வளர்க்க வேண்டும். அதே நேரம் போதிய அறிவு இல்லாமல் வெறும் எச்சரிக்கை உணர்வு மட்டும் இருந்தால் அதீத
பயத்தைத்தான் உண்டாக்கும் இந்த நோய் கண்டவர்களில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி மீண்டிருக்கின்றனர் என்ற நம்பிக்கை ஊட்டும் செய்தியை மக்களிடம் இன்னும் அதிகமாகக் கொண்டு செல்ல வேண்டும். மனித மனம் நூறு பாஸிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும்கூட ஒரு எதிர்மறையான விஷயம் இருந்தால் அதைத்தான் முழுக் கவனத்தையும் செலுத்தும்.

image

காரணம் , ஆபத்தின்மீது அதிக கவனம் வைத்தால்தான் நாம் பிழைத்திருக்க முடியும். ஆனால் எதிர்மறை விஷயங்களை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்தால் நமது வாழ்க்கை நரகமாகிவிடும்.  மனிதனை நிஜம் கொல்வதைவிட கற்பனைதான் அதிகம் கொல்கிறது. நாம் நடந்துவிடுமோ என அஞ்சும் பல விஷயங்கள் நடந்தபின்பு அவற்றை எளிதாகச் சமாளித்திருப்போம். ஆகவே  வீணான கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாமல் நிஜத்தை எதிர்கொள்வோம். நோய் வராமல் இருக்கக் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரம் நோய் வந்துவிட்டால் அஞ்சி நடுங்கவும் தேவையில்லை. நமக்குத் தேவை விழிப்புணர்வுதான். பீதியில்லை. இதைப் புரிந்துகொண்டாலே கொரோனாவை உளவியல்ரீதியாக எதிர்கொள்ளலாம்'' என தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement