மத்தியபிரதேசம் : ஸ்கூட்டி மீது காரை ஏற்றிவிட்டு நிற்காமல் சென்ற ஓட்டுநர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்தியப் பிரதேசத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டி மீது காரை ஏற்றிவிட்டு ஓட்டுநர் நிற்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


Advertisement

மத்திய பிரதேசம் ஹோசிகாபாத் என்ற இடத்தில் உள்ள மூன்று வழிச்சாலையில் நேற்று மதியம் அனைவரும் பிசியாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு சிலர் காரிலும் இரு சக்கர வாகனத்திலும் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அங்கு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த வெளிர் நீல கலர் கார் ஒன்று திடீரென எதிரே வந்த ஸ்கூட்டியை இடித்து கீழே தள்ளி அதன்மீது ஏறிச்சென்றது. அந்த விபத்தில் ஸ்கூட்டியில் வந்த இருவர் தூக்கிவீசப்பட்டதால் உயிர்த்தப்பினர். அந்த ஸ்கூட்டியை ஓட்டி வந்த நபர் எழுந்து காரை துரத்திக்கொண்டு ஓடினார். ஆனால் கார் நிற்காமல் சென்றுவிட்டது. இச்சம்பவம் அனைத்தும் அங்கு சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நேற்று மதியம் 1.10 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.

loading...

Advertisement

Advertisement

Advertisement