கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை காவலர் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் நாகராஜன்(32). இவர் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். சென்னை பாரிமுனை தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த இவர் கடந்த 3-ஆம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதால் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த 4-ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை நாகராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கெனவே சென்னை காவல்துறையில் மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, பட்டினப்பாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் மூன்றாவது காவலர் உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆயுதப்படை பிரிவில் முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்