பொது முடக்கம் காரணமாக வெளியூரில் இருக்கும் பேரப்பிள்ளைகளை பார்க்க முடியாமல் சீர்காழியில் வயதான தம்பதி நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த மீன்வியாபாரியான அருள்சாமியும், அவரது மனைவி பாக்கியவதியும் பெருந்தோட்டம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒருமகள் உள்ள நிலையில், அவர்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளதால், பேரப்பிள்ளைகளையும், தான் பெற்ற பிள்ளைகளையும் பார்க்க முடியாமல் விரக்தியில் இருந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.
தாய் - தந்தை இறப்பு செய்தியை கேட்டு பெருந்தோட்டம் வந்த அருள்சாமியின் மகன்கள், மகள் குடும்பத்தினர் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதனால், தங்களை பார்க்க முடியாமல் உயிரிழந்த பெற்றோரின் உடலை பார்ப்பதற்கு பரிசோதனை முடிவு வரை வேதனையோடு காத்திருக்கின்றனர்.
Loading More post
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
தமிழகம் ஏழ்மையில் தகிக்கிறது - கமல்ஹாசன்
கடையநல்லூர் தொகுதி உறுதியாகியுள்ளது - ஐயுஎம்எல்
“உலகில் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் இந்தியாதான்”- கீதா கோபிநாத்
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதிப்பங்கீடு விவரங்கள் இன்று அறிவிப்பு
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!