“ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் பரிந்துரைக்கவில்லை”- மருத்துவக் குழுவினர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் பரிந்துரைக்கவில்லை என மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ஊரடங்கு தொடச்சியாக நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முடிவெடுக்க மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

image


Advertisement

“இது இருந்தாலும் கொரோனாவாக இருக்கலாம்” - 3 புதிய அறிகுறிகள் 

செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் குழுவினர், ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலுஇதன்பின் ம் “ தமிழகத்தில் 80 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறிகளுடன்தான் கொரோனா இருப்பதால் பயப்பட வேண்டாம்.

சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது. இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனைகளை அதிகம் மேற்கொள்ளும் மாநிலம் தமிழகம் மட்டும்தான். சுவை, மணம் தெரியாவிட்டால் அவர்கள் காய்ச்சல் மையத்திற்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா அதிகரிப்பதால் திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களிலும் பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது”என்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement