சென்னையில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 26 பேர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்றால் 26 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்ததாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. ஆரம்பத்தில்  நாள் ஒன்றுக்கு 100, 300 என இருந்த கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று 1000, 2000 என அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் 1500-க்கு அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகின்றன.

image


Advertisement

நேற்று மட்டும் தமிழகத்தில் 2532 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் 1493 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 53 நபர்கள் உயிரிழந்தனர். இதன் மூலம் இறப்பு எண்ணிக்கையானது 757 ஆக உயர்ந்தது. இதில் சென்னையில் மட்டும் 601 நபர்கள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்றால் 26 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

ராஜீவ்காந்தி மருத்துவமனை- 10

ஓமந்தூரார் மருத்துவமனை-7


Advertisement

கே.எம்.சி மருத்துவமனை -3

ஸ்டான்லி மருத்துவமனை -1

அப்போலோ மருத்துவமனை - 5

loading...

Advertisement

Advertisement

Advertisement